தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் திமுகவினர், பன்னீர்செல்வம் பூங்கா, ஆட்சியர் அலுவலக எதிர் புறம் நசியனூர் ரோடு மற்றும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை மேயர் வி. செல்வராஜ் மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி உள்ளிட்ட உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!