வருவாய்த்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் வலியுறுத்தல்..
ஈரோடு. ஜூன். 01
ஈரோடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய அரசு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என, வருவாய்த்துறை அமைச்சரிடம் ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டல பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக அளவிலான மலைவாழ் மக்கள் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மற்றும் உரிய அரசு சான்றிதழ்களும் கிடைக்கப்பெறாமல் உள்ளது.
இதற்காக ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து அணுகி, ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளான பர்கூர், தாளவாடி, கத்தரிமலை உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அந்த மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதெல்லாம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மலைவாழ் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான உதவிகளை பெற்றுத்தர பல முயற்சிகளை, ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
அதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே எ செங்கோட்டையனை நேரில் சந்தித்து, கத்தரிமலை உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினர் மக்களுக்கான அடிப்படை தேவையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி ரேஷன் வசதி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கேட்டும், கடந்த சுமார் 70 ஆண்டு காலமாக மலைவாழ் மக்கள், மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கான அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறிப்பாக மலைவாழ் பழங்குடியினர் எஸசி. எஸ் டி ஜாதி சான்றிதழ் போன்றவை அந்த பழங்குடியினர் இன மாணவர்களுக்கு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கு அரசன் சார்பில் வழங்கப்படும் உரிய உதவிகள், வேலை வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், அதனால் அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் இடம் ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

More Stories
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்திய அரசியலின் மைய புள்ளியை தீர்மானித்தவர்முத்தமிழறிஞர் கலைஞர்திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதினி புகழாரம் !
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (07.06.2026) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள் – மாவட்டஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தகவல்.