வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி இந்தியன் வங்கியில் 59.5 கிராம் தங்க நகைக்கு பதிலாக 40 கிராம் என போலி நகைக்கடன் ரசீது வழங்கியதாகக் கூறி வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த சின்னமோட்டூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் சரத்குமார், கடந்த 16.10.2025 அன்று 59.5 கிராம் தங்க நகைக்கு ரூ.2,10,000 நகைக்கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஓராண்டு முடிந்த நிலையில், கடந்த 27.05.2026 அன்று சரத்குமார் ரூ.2,25,000 செலுத்தி, தனது பெயரிலிருந்த கடனை தங்கை சங்கீதாவின் பெயருக்கு மாற்றியுள்ளார். அப்போது 59.5 கிராம் தங்கத்துக்குப் பதிலாக 40 கிராம் மட்டுமே உள்ளதாக வங்கி மேலாளர் போலி ரசீது வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிர்சியடைந்த சரத்குமாரும், சங்கீதாவும் வங்கி மேலாளரிடம் நகையைக் காட்டுமாறும், கடந்த ஆண்டு வைத்த நகைக்கடன் ரசீது மற்றும் அன்றைய சிசிடிவி காட்சியைக் காட்டுமாறும் கேட்டுள்ளனர். ஆனால் மேலாளர் முறையற்று பதிலளித்து, “போலீஸிடம் வேண்டுமானால் சொல்லுங்கள்” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் பொன்னேரி இந்தியன் வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், மேலாளர் வழங்கிய நகைக்கடன் ரசீது போலியானது என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 59.5 கிராம் தங்கத்துக்கு 40 கிராம் என போலி ரசீது வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!