June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நல்லூர் பெருமாள் கோவிலில் கருடசேவை வைபவம்..‌!

வந்தவாசி, மே 31::

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி விசாகம் முன்னிட்டு கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் உற்சவ மூர்த்தி புஷ்ப அலங்காரத்தில் கருடன் மீது அமர்ந்த நிலையில் மேளதாளத்துடன் வீதியுலா வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தலைமை அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.