June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

வந்தவாசி, மே 27:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெள்ளார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கமலாட்சி இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ராதா இளங்கோவன் சுந்தரேசன், திமுக கழக வட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் பலரும் பங்கேற்றனர்.