June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நில மோசடி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் புகார் மனு.

ஈரோடு. மே. 27

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், புஞ்சை காளமங்களம் கிராமம், ப.க.எண்.671. 671 ஏ (புரீச எண் 98/4)-இல் காணும் விவசாய நிலம் 42 செண்டு எனது தகப்பனராகிய பெரியணகவுண்டர் மோளையப்பகவுண்டரிடம் இருந்து கிரயத்திற்கு வாங்க ஈரோடு சார்பதிவலகத்தில் கிரயபத்திர எண் 1767/1975 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய நாள்வரை எங்களது அனுபவத்தில் இருந்து வருகிறது. இவ்வாறான நிலையில் மோளையப்பகவுண்டர் மகன் எம்.மோகனசுந்தரம் முதலில் வருவாய்துறையில் போலி ஆவணங்களை வைத்து அவரது தகப்பனார் மோளையப்பகவுண்டர் எனது.தந்தை பெரியணகவுண்டருக்கு விற்ற சொத்து என நன்கு தெரிந்திருந்த நிலையில் என்னிடம் வந்து 1767/1975 ஒரிஜனல் டாக்குமெண்டை பிற சொத்து குறித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு என மோகனசுந்தரம் கேட்டதின் நம்பிக்கையின் பெயரில் நானும் கொடுக்க எம்.மோகனசுந்தரம் எனது ஓரிஜனல் பத்திரத்தை வாங்கி சென்ற நிலையில் திருப்பி தராத நிலையில் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்துகொண்டு சூரம்பட்டி சார்பதிவலகத்தில் சூரம்பட்டி சார்பதிவாளர் துணை சார்பதிவாளர் அவர்களிடம் பி.பழனியப்பன் ஆகிய எனக்கு கிரய வகையில் பாத்தியப்பட்ட சொத்து என்பதையும் எனது முழு சுவாதீனத்தில் இருந்து வருகிறது என்பதையும் மறைத்து என் நிலத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு போர்ஜடியாக 1) லேட்மோளையப்பகவுண்டர் மகன் எம்.மோகனசுந்தரம் , 2) லேட், மோளையப்பகவுண்டர் மனைவி எம்.வேலாயிம்மாள், 3) லேட் மோளையப்பகவுண்டர் மகள் பி.மாலதி ( 4) ராமசாமி மகன் ஆர். மோகன் 5) கந்தசாமி மகன் கே. மாணிக்கசுந்தரம் ஆகியோர் ஒன்றிணைந்து எனக்கு கிரய வகையில் பாத்தியப்பட்ட சொத்தை பட்டாவில் பெயர் மாற்றி எனது அனுபவத்தில் உள்ள சொத்து என்று நன்கு தெரிந்திருந்த நிலையில் திட்டமிட்டு சூரம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் மற்றும் துணை சார்பதிவாளர் அவர்களிடம் மேற்கண்ட விவசாய நிலம் குறித்து மோளையப்பகவுண்டர் விற்பனை செய்ததை மறைத்தும் பழனியப்பன் ஆகிய எனது முழுகவாதீனத்தில் இருப்பதை மறைத்தும் வருவாய்துறையில் ஆவணங்களின்றி பட்டா பெயர் மாற்றம் செய்ததை வைத்து பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்ய போர்ஜடியாக பாகப்பிரிவினை பத்திரம் எண் 176/2026 பதிவான நிலையில் எனக்கு என் நிலம் போர்ஜடியாக ஆவணம் ஏற்படுத்தி மறுகிரயத்திற்கு விலை கூறிய போது உண்மை நிலை அறிந்த நிலையில் சம்பந்தபட்ட காவல்நிலையத்தில் சம்பந்தபட்ட அலுவலகத்தில் குற்றவியல் புகார் மனு பதிவு செய்ய மேற்கண்ட ஐவர் மீது புகார் கொடுத்திருந்த நிலையில் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் 29/04/2026 ஆம் நாள் எனது குற்றவியல் புகாரினை ஆவணங்களை ஆதாரங்களாக கொண்டு மோசடி ஆவணம் ஏற்படுத்தி இருப்பதை விசாரணையின் வாக்குமூலத்தில் தெரிவித்தும் அவர்கள் போர்ஜடியாக ஆவணம் ஏற்படுத்திய மேற்கண்ட ஐவர் மீதும் குற்றவியல் புகாரினை பதிய மறுத்துவிட்டார்கள். மேலும் நானும் சம்பந்தபட்ட காவல்நிலையங்களில் இணையதளத்தில் இதுநாள் வரை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புகார் கொடுத்தும் எந்த ஒர் மனுவும் பதியப்படவில்லை.ஆகையால் மேன்மை தாங்கிய தாங்கிய என் குற்றவியல் புகார் மனுவினை தீர் ஆய்வு செய்து எனது ஆவணங்களை ஆதாரங்களாக கொண்டு என்னிடம் ஒரிஜனல் பத்திரத்தை வாங்கிகொண்டு திருப்பித்தராமல் நம்பிக்கை துரோகம் செய்து போர்ஜடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து மோசடி ஆவணம் ஏற்படுத்தி நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதோடு என்னை அவதூறாக பேசுவதோடு காவல்துறையில் புகார் கொடுத்து வருவதால் மிரட்டி வருவதாலும் நான் மேன்மேலும் காவல்துறை அலுவலகத்தில் குற்றவியல் புகார் மனு பதிவு செய்ய புகார் மனு கொடுத்த நிலையில் இதுநாள் வரை குற்றவியல் புகார் மனு பதிவு செய்யததால் 75 வயதான என்னால் அலையமுடியாத காரணத்தால் இந்த குறைதீர்க்கும் நன்னாளில் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து என்னை ஏமாற்றி போர்ஜடி ஆயணம் ஏற்படுத்தி என் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு என்னை அவதூறாக தகாத வார்த்தை பேசி என்னை மிரட்டி அச்சுறுத்தி வரும் எம்.மோகனசுந்தரம், எம்.வேலாயிம்மாள், பி.மாலதி, ஆர்.மோகன், கே. மாணிக்கசுந்தரம் மீது குற்றவியல் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேளண்டுமாய் மிகவும் உண்மையுடன் கேட்டுகொள்கிறேன்.