February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு விழா..

ஈரோட்டில் பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

ஈரோடு. நவ.,, 08

வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்திய தேசிய கீதமாக அனைவராலும் வணங்கப்படும் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மங்கி பாத் நிகழ்ச்சியில் வந்தே மாதரம் 150 வது ஆண்டு விழாவை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, சிவகிரி பேரூராட்சியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் சிலை முன்பு அனைவரும் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடியும், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் எம் செந்தில் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியான அதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தியாகி திருப்பூர் குமரன் மற்றும் சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை ஆகியோரின் திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

தொடர்ந்து இந்திய தேசிய கொடியை ஏந்தி அனைவரும் பேரணியாக சென்று வந்தே மாதரம் பாடலை பாடினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp