June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கோவை: மே-12

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில்
கடந்த வாரங்களில் எதிர்பாராமல் வந்த சூறாவளி காற்று மற்றும் மழையால் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வாழை தென்னை பாக்கு மற்றும் பல பயிர்கள் முறிந்தும் வேறோடு சய்ந்தும் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.இதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது குறிப்பாக வாழையை நம்பி ஒன்றறை ஆண்டு செலவு செய்து காத்திருந்த உழவர்களுக்கு வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதித்து இருக்கிறது.

உழவர்கள் உரிய இழப்பீடு வழங்க கோரி வேளாண்துறையை அனுகிய போது அரசு வாழை ஒன்றுக்கு இழப்பீடாக 6 ரூபாய் வழங்குவதாக சொன்னார்கள் இந்த தொகை விழுந்த வாழையை அகற்றுவதற்கு கூட பத்தாது,அரசு வேளாண்துறை வாழை ஒன்றுக்கு வளர்த்து அறுவடை செய்ய 150 ரூபாய் செலவு ஆகும் என்று சொல்கிறது ஆனால் இழப்பீடு மட்டும் 6 ரூபாய் வழங்குவது உழவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது எனவே தாங்கள் ஆய்வு செய்து உழவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் நூற்றுக்கு 35 மரத்திற்கு மேல் சேதாரம் ஏற்பட்டால்தான் இழப்பீடு வழங்குவதாக சொன்னார்கள் பாக்கு வாழை மற்றும் மரப்பயிர்கள் பல வருடமாக வருவாய் தரும் 1 மரம் 20 மரம் என்று முறிந்து விழுந்திருக்கிறது அதிகமான இடங்களில் எனவே விழுந்த மரத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்..

You may have missed

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.