ஈரோடு மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அமைச்சர், எம் எல் ஏ மற்றும் மேயர் ஆகிய கலந்து கொண்டனர்
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதியின் 50 மற்றும் 51 ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த சிறப்பு திட்ட முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் 45 நாட்களில் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 50 மற்றும் 51 வது வார்டு பகுதி பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ உதவிகள் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுக்களை முகாமில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
தொடர்ந்து இந்த முகாமில் அமைச்சர் சு. முத்துசாமி, எம் எல் ஏ வி. சி சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் வி. செல்வராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து.
முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு உத்தரவு நகலை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கோள்மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்