June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டு ‌..

மண்டல குழு தலைவர்கள்–மாமன்ற உறுப்பினர்கள் ஆவேசம்…

எந்த பணியும் நடைபெறவில்லை என ஆதங்கம்…

ஈரோடு அக். 31

ஈரோடு மாநகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் பேசிய மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசினார்.

ஈரோடு மாநகராட்சியின் வழக்கமான மாதாந்திர சாதாரண மாம் என்ற கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் வி. செல்வராஜ், ஆணையாளர் அர்பித் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி கூட்டத்தை வழக்கம் போல் மேயர் நாகரித்தினம் திருக்குறள் சொல்லி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கையை 1வது மண்டல குழு தலைவர் பி. கே பழனிசாமி முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வழக்கம்போல் ஆவேசங்காட்டும் 43 வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பாட்ஷா மேயருக்கு நன்றி தெரிவித்து ஒரு வரி மட்டும் பேசி அமர்ந்து விட்டார்.

அதன் பின்னர் வழக்கம்போல் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

அதில் குறிப்பாக, மண்டல குழு தலைவர்கள் பிகே பழனிசாமி, குறிஞ்சி தண்டபாணி, காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியன், சசிகுமார் ஆகியோரும் மற்றும் திமுகவை சேர்ந்த பல்வேறு வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின், நிர்வாக சீர்கேடுகளையும் குறைகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.

குறிப்பாக மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள அதிக அளவிலான வருகினங்கள், ஊராட்சி கோட்டை கூட்டுக் குழு நீர் திட்டம் குறைபாடுகள், சாலை மற்றும் சாக்கடை வசதிகள் சரியில்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி மாநகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை ஆவேசமாக அடுக்கினார்கள்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை குறித்தும், அதனால் பொதுமக்கள் கடுமையான முறையில் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும் பேசினார்கள்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் சிலர் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மாட்டு இறைச்சி கடைகளால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்தும், மாட்டு இறைச்சி கழிவுகள் நீர் நிலைகளில் மற்றும் சாக்கடை கால்வாய்களில் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பேசினார்.

இதற்கிடையே கனி ராவுத்தர் குள்ளம் அருகே அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து அதிமுகவை சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து மற்றும் மாமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் விளக்கம் கேட்க, கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர் ஈரோடு மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்டுள்ள கூடுதல் வரி இனங்களை இதனால் வரை குறைக்கவில்லை என குற்றம் சாட்டி அவர்கள் அதிமுக குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் வெள்ளி நடப்பு செய்தனர்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரி முதல் கடை நிலை ஊழியராக இருக்கும் பிட்டர், பிளம்பர் கூட எங்களை மதிப்பதில்லை. இனி வரும் காலங்களில் மாநகராட்சி கூட்டத்தை நடத்தாமல், தீர்மான புத்தகத்தை அனைத்து கவுன்சிலர்களிடம் வீட்டில் கொடுத்து கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உங்கள் வசதிக்கேற்ப மாநகராட்சி நிர்வாகத்தை நடத்துங்கள் என மறைமுகமாக மேயர் நாகரத்தினத்தை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு வைத்து கோபத்தோடு பலர் பேசினர்.

கூட்டத்தின் இறுதியாக பேசிய, 1வது மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி பேசும்போது…

ஈரோடு மாநகராட்சியில் புதிய கட்டிடத்திற்கு மறைந்த தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் பெயர் வைக்கும் கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படத்தை மாமாட்ட கூட்டத்தில் வைத்ததற்கு நன்றி தெரிவித்து பேசினார்.

மேலும் ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், காளை மாடு சிலை முதல் ஜி ஹெச் வரை உயர்தர, உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இந்த மாமன்றத்தின் மூலம் நன்றிகளை தெரிவிப்பதாகவும் பேசினார்.

பின்னர் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உதவிய ஆணையாளர் தனலட்சுமி, மாநகரப் பொறியாளர் கே. முருகேசன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
[3:44 PM, 10/30/2025] +91 63852 74100: சற்று பெரிய செய்திதான். அனுப்பி உள்ள நான்கு படங்களையும் இணைத்து வைக்கவும். நன்றி.