பாண்டியன் குலம் புனித லூர்து அன்னை ஆலய பத்தாம் ஆண்டு திருவிழாசெஞ்சி மே 01விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா சம்பந்த ஊராட்சி பாண்டியன் குளம் கிராமத்தில் புனித லூர்து அன்னை ஆலய பத்தாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றதுநிகழ்ச்சியில் 24/ 04 / 2026 அன்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திருப்பலியும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றதுதொடர்ந்து 27/04 / 2026 திங்கட்கிழமையன்று மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நடனம் மற்றும் சிலம்பம் கும்மி பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுதொடர்ந்து28/04/ 2026 அன்று செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணி முதல் திருப்பலி அணிலாடி பங்குத்தந்தை பெர்க்மான்ஸ் மற்றும் பேராசிரியர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றதுமுன்பாக கம்மந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி தலைமையில் புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு மேயாதாளம் சீர்வரிசை எடுத்து வந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து லூர்து அன்னையை தரிசனம் செய்தனர்தொடர்ந்துஇரவு 8:30 மணிக்கு தேர் பவனி துவங்கியது வான வேடிக்கையுடன் நடைபெற்ற தேர்பவனி யை ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி சமூகத் தலைவர் பவுல்தாஸ் பங்குத்தந்தை பெர்க்மான்ஸ் பீட்டர் பேராசிரியர் அலெக்ஸ் ஊர் பொதுமக்கள் தேர் பவனியை இழுத்து தொடங்கி வைத்தனர் தேர் பவனியானது தெருக்களில் வளம் வந்து லூர்து அன்னை பக்தர்களுக்கு அருள் பாலித்தார்இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!