வந்தவாசி, ஏப் 27:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவுற்று 48 ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு விழா வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புஷ்பார்ச்சனை நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற கர்நாடக இசை கச்சேரி மற்றும் நாட்டியாஞ்சலி வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!