ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் வழங்கினார்.
ஈரோடு. ஏப்ரல். 26
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராம கல் கடம்பூர் பகுதியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய மலை கிராமமாக விளங்குவது கல் கடம்பூர் மலை கிராமமாகும். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மலை கிராம வாசிகள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதியில் விவசாயக் கூலி செய்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த கல் கடம்பூர் மலை கிராம மக்களின் பிள்ளைகள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வரும் சூழலில் அப்பகுதியில் உள்ள மலை கிராம பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் பொது விஷயங்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் இந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகள் என்பது கிடைக்க பெறாமல் இருந்து வருகிறது.

இதனை ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிந்து கொண்ட, ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப், நேரடியாக அந்த மலை கிராமமான கல் கடம்பூர் கிராமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள கிராம மக்களின் வாழ்வியல் சூழலையும், அங்கு ஏழ்மை நிலையில் இருந்தும் அரசு பள்ளியில் படித்து வரும் மாணாக்களின் கல்வி மற்றும் விளையாட்டு ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிந்த டாக்டர் எண்ணம் பிரதீப். அரசு பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகளை நேரில் சந்தித்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு அந்தப் பகுதியை சேர்ந்த அனாக்கர்களுக்கு, பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கியும், பள்ளியில் சமையல் தளவாடங்கள் வழங்கவும் முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து கல் கடம்பூர் மலை கிராம பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கபடி விளையாட்டில் ஆர்வமும், திறமையும் இருப்பதை கண்டறிந்து அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கபடி விளையாட்டு பயிற்சி வழங்கி, அவர்களுக்கு கபடி விளையாட்டுக்கு தேவையான, பனியன் மற்றும் டீ சர்ட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் எண்ணம் பிரதீப் நேரடியாக சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த மாணாக்கர்களும் அப்பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப்பை நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்து நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்