திருமலா பால் நிறுவனத்தில் இருந்து பள்ளிக்கு இலவச தளவாட பொருட்கள்…!
1 min read
வந்தவாசி, ஏப் 25:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வந்தவாசி அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு தேவையான முக்கிய தளவாடப் பொருட்களை திருமலா பால் நிறுவனத்தில் இருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா கோதண்டராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவாஜி கணேசன் வரவேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் டிஎம்பிஎல் டி..கோதண்டராமன் தளவாட பொருட்களான டேபிள், நாற்காலிகள், மின்விசிறிகள், பீரோ உள்ளிட்டவைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.விஜயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருமலா பால் நிறுவன இயக்குநர் பாஸ்கர், சேதுபதி, டாக்டர் ஜெயபால், லோகேந்திரன், லோகேஷ், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் சிவராஜ், கிருஷ்ணமூர்த்தி, மணி,கிராம உதவியாளர் ரஞ்சித் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
More Stories
இந்திய அரசியலின் மைய புள்ளியை தீர்மானித்தவர்முத்தமிழறிஞர் கலைஞர்திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதினி புகழாரம் !
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (07.06.2026) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள் – மாவட்டஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தகவல்.
மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு.