புதுச்சேரி:
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பொது அனுமதி வழங்கக் கோரி, தேசிய மக்கள் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சாமிநாதன் உடனிருந்து மனுவைச் சமர்ப்பித்தார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் க. சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் இந்நாளில் அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும் எவ்வித தடையுமின்றி, அமைதியான முறையில் மக்கள் மரியாதை செலுத்த ஏதுவாக உரிய பாதுகாப்புடன் கூடிய பொது அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்