June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மொடக்குறிச்சி தொகுதியில் வைகோ_ துரை வைகோ தேர்தல் பிரச்சாரம்..

உற்சாகத்தில் தொண்டர்கள் _ வெற்றிக் களிப்பில் வேட்பாளர் செந்தில்நாதன்..

ஈரோடு. ஏப்ரல். 12

மொடக்குறிச்சியில் நடைபெற்ற வைகோ மற்றும் துறை வைகோ தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்பு தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றிக் களிப்பில் உள்ளார்.

தமிழக சட்டமன்ற பேரவை பொது தேர்தல் 2026, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் திமுக தலைமையிலா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்களின் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக மதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் போட்டிருக்கிறார்.

இவர் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்களோடு சென்று தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் செல்லும் இடமெல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி மதிமுக எம்பி, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோ மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட, கணபதிபாளையம் மற்றும் கருமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனே ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாநாடு துறை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தொகுதியில் மதிமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ததால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார்.