நாளை முதல் கட்டாயம்
சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி
மணப்பாறை,மார்ச்.31-
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 66 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவ்வழியாக செல்லும் வாகனங்களிடம் ஆர்.எப்.ஐ.டி. தொழில்நு ட்பம் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வாகன முகப்பு கண்ணாடியில் ஒட்டப்படும் இந்த ஸ்டிக்கர் சுங்கச்சாவடியில் உள்ள ஸ்கேனருடன் இணைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் நேரடியாக கட்டணத்தை செலுத்தி
வருகின்றனர். புதிய நடைமுறை
ஏப்ரல் 1-ந் தேதி முதல்
சுங்க கட்டணம் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களிடம் வசூலிக்க கூடாது என சுங்கச்சாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை இரவு முதல் டிஜிட்டல் பணப்பரி வர்த்தனை மூலம் கட்டணம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. இது குறித்து சுங்கச்சாவடி நிர்வாகிகள் கூறுகையில், அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளி லும் பே.டி.எம். மற்றும் என்.எச்.ஏ.ஐ. இணைய தளம் வழியாக கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. ரூ.3000 செலுத்தினால் தனியார் கார்கள், ஜீப்க ளுக்கு ஓராண்டு அல்லது 200 பயணங்ளுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கும் வசதியும் உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனையில் மட்டுமே கட்டணம் முடியும். இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடி, திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தங்கம்மாபட்டி சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election