திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு – 100% வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்பு ….
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்து திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். உடன் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொறிஞர் மு.சுரேஷ்குமார், அ.சிவேந்திரன், கவிஞர் இர.ஆனந்தராசன்,முனைவர் அருள்ராஜ், அய்யன்காளி மனோகர், செந்தில்,சம்பத் நீசு,நூலகர் ராஜேந்திரன், ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.