June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி: தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் – ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026- நடைபெறுவதையொட்டி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 51.ஊத்தங்கரை (தனி) மற்றும் 52.பர்கூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு .அனில் குமார் சிங் இ.ஆ.ப.,, 53.கிருஷ்ணகிரி மற்றும் 54.வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகளுக்கு.சௌரவ் பாபு இ.ஆ.ப., 55.ஓசூர் மற்றும் 56.தளி சட்டமன்ற தொகுதிகளுக்கு.பண்வே ராகுல் துக்காராம் இ.ஆ.ப., மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 51.ஊத்தங்கரை (தனி) மற்றும் 52.பர்கூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு.சந்தோஷ்குமார், ஐ.ஆர்.எஸ்., 53.கிருஷ்ணகிரி மற்றும் 54.வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகளுக்கு.D.சதீஸ் ஐ.ஆர்.எஸ்., 55.ஓசூர் மற்றும் 56.தளி சட்டமன்ற தொகுதிகளுக்கு .ராகுல் சிங்கானியா ஐ.ஆர்.எஸ்., ஆகியோர் முன்னிலையில் (19.03.2026) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பெ.தங்கதுரை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்