தமிழ்நாடு அரசு மிக சிறப்பான முறையில் விளையாட்டுத் துறையையும், விளையாட்டு வீரர்களையும், விளையாட்டு சங்கங்களையும் ஊக்குவித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சதுரங்க வீரர்கள் உலக அளவில் சாதித்து வருகிறார்கள், கரூர் மாவட்டத்தில் பல சதுரங்க கிளப்புகள் செயல்பட்டு கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சதுரங்க சங்கம் பல ஊழலில் ஈடுபட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட சதுரங்க சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை இவை பதிவு செய்யப்பட்டும் புதுப்பிக்கப்படவில்லை.விளையாட்டு சங்கங்கள் மாவட்டம், மாநில அளவில் செயல்படும் போது உரிய முறையில் உறுப்பினர்கள் கூட்டங்களை நடத்தி வருடாந்திர கணக்கு வழக்குகளை தெரிவிப்பார்கள். கரூர் மாவட்ட சதுரங்க சங்கம் யாருக்கும் எதையும் தெரிவிப்பதில்லை.
சதுரங்க சங்கத்தில் பல லட்சம் பணம் இருந்தும் அந்த பணத்தை விளையாட்டு வீரர்களின் நலனுக்காக பயன்படுத்துவது இல்லை.இந்தப் பணத்தை முறையாக சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கும் சங்க வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே விதி உள்ளது. தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்மார்ட் செஸ் அகாடமி சேர்ந்த தலைவர் மணிகண்டன் என்பவர் சதுரங்க விளையாட்டை வியாபாரம் ஆக்கிவிட்டார்.இவர் ஒரு வருடத்திற்கு 10 முறைக்கு மேல் போட்டிகளை மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தி வருகிறார்.
இதை கரூர் மாவட்ட சதுரங்க சங்கம் பணத்திற்காக ஊக்குவித்து வருகிறது.இவரால் மற்ற சதுரங்க கிளப்புகள்
போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவர் மட்டும் போட்டியை கரூரில் நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். சதுரங்கப் போட்டி ஒருவர் நடத்துகின்றார் என்றால் மாநில மற்றும் மாவட்ட சங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்.
அப்பொழுதுதான் மாநிலம் மற்றும் மாவட்ட சங்கமானது போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கும்.கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சதுரங்க போட்டியை பார்த்து பிற மாவட்டத்தில் உள்ள சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளது.
இதைக் வன்மையாக
கண்டித்து அரசுக்கு தெளிவான கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மணிகண்டன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுவது வேதனையாக உள்ளது. இதை மாநில மற்றும் மாவட்ட சதுரங்க சங்கம் ஏன் கண்டிக்கவில்லை. எப்படி இத்தனை முறை போட்டிக்கு அனுமதி கொடுத்தீர்கள்.கரூர் மாவட்டத்தில் உள்ள பிற சதுரங்க கிளப்புகள் போட்டியை நடத்தினால் சதுரங்க போட்டியை நடத்தக்கூடிய சதுரங்க நடுவர்களை மணிகண்டன் போன் செய்து இந்த போட்டியை நடத்த நீங்கள் வர வேண்டாம் என்று சொல்லி வருகிறார். இது மிக வெட்கக்கேடான விஷயம்.மணிகண்டன் என்பவர் யார் இவர் எவ்வாறு சதுரங்க போட்டிக்குள் உள்ளே வந்தார். தற்பொழுது சதுரங்க விளையாட்டை அழித்து வருகிறார்.கரூர் மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டை வளர்ப்பதற்கு பல கிளப்புகள் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. மணிகண்டன் அவர்கள் பணம் மட்டுமே குறிக்கோள் என்று சதுரங்க விளையாட்டை கரூர் மாவட்டத்தில் கேவலப்படுத்தி வருகிறார். மக்கள் மற்றும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் பணத்தை வெளிப்படையாக திருடி வருகிறார். இவர் நடத்தும் போட்டியில் நுழைவு கட்டணம் மிக மிக அதிகமாக வசூலிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்களும் பள்ளியில் படிக்கும் சதுரங்க விளையாட்டு மாணவ, மாணவிகளும் கவனமாக இருக்க வேண்டும். இது போல் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம். உங்கள் பணத்தை விரயம் செய்யாதீர்கள் என்று உங்களிடம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.கரூர் மாவட்ட சதுரங்க சங்கத்தில் நடைபெறும் தில்லு முல்லுகள் மணிகண்டனை போன்றவரை ஊக்குவிப்பது எல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். கண்டிப்பாக இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டோம்.மணிகண்டனால் கரூரில் உள்ள பல சதுரங்க கிளப்புகள் வீணாகிக்கொண்டு வருகிறது.
மணிகண்டன் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டு போட்டியை நடத்தி பல லட்சங்கள் சம்பாதித்து உள்ளார்.மணிகண்டன் அவர்கள் கரூர் மாவட்டத்தில் போட்டியை நடத்துவதற்கு நுழைவு கட்டணமாக 500 முதல் 2000 வரை பெறுகிறார்.இவ்வளவு பணம் பெற உங்களுக்கு அனுமதி வழங்கியது யார். யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது. உங்களுக்கு அசிங்கமாக இல்லையா.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் ஏகப்பட்ட வலி இருக்குது. தொழில் செய்யுங்கள், விவசாயம் செய்யுங்கள், கூலி வேலை செய்யுங்கள், ஆனால் விளையாட்டை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இத்தனை விளையாட்டுப் போட்டியை பணத்துக்காக நடத்திவிட்டு நாங்கள் விளையாட்டு வீரரின் வளர்ச்சிக்காக நடத்துகிறோம் என்று நாவு கூசாமல் பொய் சொல்கிறீர்கள். எத்தனை சர்வதேச விளையாட்டு வீரர்களை கரூர் மாவட்டத்தில் உருவாக்கிய உள்ளீர்கள். அவர்கள் பணத்தை திருடுவது மட்டுமே உங்களுடைய நோக்கம்.கரூர் மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டு சங்கம் அழிவு பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் நிறுத்தவில்லை என்றால் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஆதாரங்களும் கடந்த 10 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தேசிய, மாநில சங்கத்திற்கும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கவனத்திற்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் கவனத்திற்கும் மாண்புமிகு மக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு கவனத்திற்கும் உரிய ஆதாரத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.கரூர்
சதுரங்க விளையாட்டு மாவட்ட செயலாளர் அவர்கள் இவருக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்து வைத்திருக்கிறார். இவை அனைத்துமே நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்படும். இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பெற்றோர்கள், விளையாட்டு சமூக ஆர்வலர்கள்
சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

More Stories
பாஜக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, விளையாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பாராவாலி ஒலிம்பிக் வாலிபால் போட்டி..