புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சொந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையங்கள் செயல்படாமல்… தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.இதனால் அங்கன்வாடி மைய ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொகுதி சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர்
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களிடம்.எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை எங்கள் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டிக் கொடுங்கள் என பல கோரிக்கைகள் வைத்திருந்தனர்.கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகரப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு அரசு நிர்ணயித்த வாடகைக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் சொந்த கட்டிடங்கள் தேவை என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் மேலும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக மேலும் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்.தொகுதிக்குட்பட்ட அரசு நிலங்கள் ஏதேனும் உள்ளதா என தேடப்பட்டு அதில்
குபேர் நகர் 5- வது குறுக்கு வீதியில் புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஆக்கிரமித்து இருப்பதை அறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குபேர் நகர் வார்டு
குபேர் நகர் 5-வது தெருவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்காக 2023-2024 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி
ரூபாய் 34 லட்சத்து 32 ஆயிரம் செலவில் புதுச்சேரி நகராட்சி மூலம் பணிகள் துவங்கப்பட்டு முடிக்கப்பட்டது அதன் திறப்பு விழா.மற்றும் பொதுப்பணித்துறை பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு மூலம் மேற்கண்ட
கோவிந்தசாலை, குபேர் நகர், புது நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான தூய்மையான சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக ரூபாய் 10. லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் 09.06.2026. திங்கள் கிழமை இன்று காலை 9:30 மணியளவில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
நேயம் மக்கள் கழக தலைவர்மான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் திருக்காரங்களால் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில்
புதுச்சேரி நகராட்சி
ஆணையர் திரு.ஸ்ரீஜித்
நகராட்சி
செயற்பொறியாளர்
திரு.சிவபாலன் பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர்
திருமதி.சுந்தரி
நகராட்சி
உதவி பொறியாளர்கள்
திரு.பழனிராஜா
திரு.நமச்சிவாயம் பொதுப்பணித்துறை பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர்
திரு.ரமேஷ்குமார்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் திட்ட அதிகாரி
திரு.செல்வகுமார்
இளநிலை பொறியாளர்கள்
திரு.குப்புசாமி
திரு.வெங்கடேசன்
மற்றும் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் நகராட்சி ஊழியர்களும் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்களும் உதவியாளர்களும் மேலும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த
நேயம் மக்கள் கழக பிரமுகர்களும், நிர்வாகிகளும், மகளிர்களும், இளைஞர்களும் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெரியவர்களும் பகுதி பொதுமக்களும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்