April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் பெண் தலைமையில் மக்களுக்கான ஆட்சி அமைந்தால்தான் புதுச்சேரியை காப்பாற்ற முடியும்மகளிர் தின விழாவில் ஆர்.எல். வெங்கட்ராமன் ஆவேச பேச்சு.!!!.

புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கழகத்தின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் கொண்டாடப்பட்டது. கூட்டத்திற்கு ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி திருமதி வாசுகி அவர்கள் தலைமை தாங்கினார். சிவக்குமாரன், கோமதி, கவிதா, சாந்தி , மகளிரணி துணை தலைவி ரூபிணி, பொது செயலாளர் கீதா, செயலாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சர்வதேச மகளிரணி விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, சரண் தொண்டு நிறுவனத் தலைவர் திருமதி. மு.லாவண்யா அவர்கள் பேசும்போது , பெண்கள் தான் இந்நாட்டின் கண்கள் என்றும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் எனது ரோல் மாடல் என்றும் மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன் அந்த வகையில் புதுச்சேரியில் ஐயா ஆர்.எல். வெங்கட்ராமன் அவர்களின் மக்களுக்கான சேவை பாராட்டுக்குரியது என்று சிறப்புரை ஆற்றினார்.
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் திருமதி . வாசுகி அவர்கள் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த ஹாட் பேக்கை திருமதி.
மு. லாவண்யா அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் கொடுத்து கௌரவித்தார்.

மகளிர் தின விழாவில் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது புதுச்சேரியில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் , 2026 தேர்தலில் ஒரு பெண் தலைமையில் மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரியில் 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏராளமான மது கடைகளை திறந்து புதுச்சேரியை மதுச்சேரியாக மாற்றி பெண்களை விதையாக்கி உள்ளனர். அதற்கும் மேலாக பெண்களையும் விட்டு வைக்காமல் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் அதிகப்படியான ரெஸ்டோ பார்கள் உருவாக்கி பெண்களுக்கு குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி உள்ளனர். மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து நிலத்தடி நீரை கெடுத்து வைத்துள்ளனர். போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து மக்கள் உயிரோடு விளையாடினர். இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம் என்று கூறும் முதல்வர் ரங்கசாமிக்கு மக்கள் வேலை வாய்ப்புக்காக புதுச்சேரி முழுவதும் போராட்டக் களமாக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பது தெரியவில்லையா.ஒட்டு மொத்தமாக இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். புதுச்சேரியில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் . ஆகவே அனைத்து பெண்கள் வாக்கு என்கிற ஆயுதத்தை பயன் படுத்தி மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களுக்கான ஆட்சியை உருவாக்க ஒரு பெண் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் என்றுமே வழிகாட்டியாக இருக்கும் என்று ஆவேசமாக பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோமதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் சிவகாமி, ராஜ்பவன் தொகுதி தலைவர் தாயாரம்மா, மணவெளி தொகுதி தலைவர் தனலட்சுமி ஊசுடு தொகுதி தலைவர் காமாட்சி , சரளா, அமலா,உமா, ப்ரீத்தி, பிரகாஷ், பரினா ஆகியோர் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

Facebook
YouTube
Instagram
WhatsApp