புதுச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையின் மாநிலச் செயலாளராக செல்வ புஷ்பலதா அவர்களை, கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முறைப்படி நியமித்துள்ளார்.
புதுவை உழவர்கரையைச் சேர்ந்த செல்வ புஷ்பலதா, கடந்த 8 ஆண்டுகளாக விசிக-வின் மகளிர் அமைப்பான ‘மகளிர் விடுதலை இயக்கத்தின்’ துணைச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் சில முக்கிய உலக சாதனைகளுக்காகவும் அறியப்படுகிறார்:
கடலூரில் நடைபெற்ற நிகழ்வில், 3100 கட்சித் தொண்டர்களைக் கொண்டு “பனைமுகம் திருமூகம்” என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கரின் உருவத்தை உருவாக்கினார்.
10,600 பனை விதைகளைக் கொண்டு கட்சியின் தலைவர் திருமாவளவனின் உருவத்தை வரைந்து ‘யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகாரத்தைப் பெற்றார்.
சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் திருமாவளவனைச் சந்தித்து செல்வ புஷ்பலதா வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின் போது அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி வந்தடைந்த அவருக்கு விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விசிக முதன்மைச் செயலாளர் அரிமாத்தமிழன், அமைப்புச் செயலாளர்கள் தமிழமாறன், ஆதவன், தலைமை நிலையச் செயலாளர் செல்வ நந்தன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election