ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி நிறுவனம்__ தயா அறக்கட்டளை இணைந்து பணியாற்ற ஒப்பந்தம்.
ஈரோடு. மார்ச்.01
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் படித்து வரும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்ய முடிவு செய்து ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி நிறுவனம் மற்றும் ஈரோடு தயா அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பர்கூர் மற்றும் சத்தியமங்கலம், திம்பம் தாளவாடி உள்ளிட்ட பல மலை கிராமங்கள் உள்ளது.
இந்த மலை கிராமங்களில் மலை கிராம பழங்குடியினர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
தினந்தோறும் கிடைக்கின்ற கூலி வேலைகளுக்கு சென்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் இவர்களின் குழந்தைகள் ஒரு நல்ல தரமாய்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை.
இந்த மலைவாழ் மக்கள் பழங்குடியினர் இன குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு அரசு உதவி செய்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு சமூக நோக்கத்தோடு பழங்குடியினர் என மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கும் அவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டுவதற்கும், சில சமுதாய அமைப்புகள் முன்வந்துள்ளது.
குறிப்பாக ஈரோடு தயா அறக்கட்டளை மற்றும் ராசாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளை இவைகளின் நிறுவன தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், மலைவாழ் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க பல்வேறு அடிப்படை உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஒரு முக்கிய கல்வி நிறுவனமாக விளங்கும் ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஈரோடு தயா அறக்கட்டளை, ராஜாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் ஆகியோர் இணைந்து மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கும் மேலும் அவர்களின் விளையாட்டு திறமையை மேம்படுத்தவும் உதவிகள் செய்வது என்று இரு தரப்பினரும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன்மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய பழங்குடியினர் என மாணவர் மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உதவிகள் கிடைக்கும் சூழலை ஏற்பட்டுள்ளது.

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!