February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூரில் அமமுக சார்பில் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா மத்தூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சா. கணேஷ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேற்கு ஒன்றிய செயலாளர் க.மோகன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இனிப்பு வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பங்கேற்ற நிர்வாகிகள்:
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்:
செந்தில் தெற்கு ஒன்றிய செயலாளர்
முருகன் ஓட்டுநர் அணி
அம்மா ரவி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்.
பாலையா மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்.
சிவாஜி ஒன்றிய துணை செயலாளர். ஆனந்தன் பொதுக்குழு உறுப்பினர்.
மேலும் தண்டபாணி, செல்வம், மாதேஷ், சுப்பிரமணி, சையத் பாஷா, மாரியப்பன், நாகராஜ், சகாதேவன், பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கழந்துக்கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp