June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அதிமுக பொதுசெயலாளர், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் இன்று மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். புதுச்சேரி உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கழக கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கும், புரட்சித் தலைவர் திருவுருவ சிலைக்கும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கபட்டன.மேலும் நகராட்சி அலுவலகத்தில் அரசு சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம்,கல்வி உதவித்தொகை, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவில் மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

  திமுக என்ற தீய சக்தியை அரசியல் அரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கம் அதிமுக. புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு அதிமுக என்ற மாபெரும் கட்சியை அகில இந்திய அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக கட்டிக்காத்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். பன்முக திறமை, சிறந்த மதிநுட்பம், சிறந்த ஆளுமை, தேசபற்று, சமுக நீதியில் அக்கறைகொண்டவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆவார்.

  தன் உயிர் மூச்சு உள்ளவரை ஏழை எளிய ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபாட்டவர் நம் புரட்சித்தலைவி அம்மா ஆவார். நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்தும் மறையாமல் விண்வெளியில் உள்ள துருவ நட்சித்திரமாக நம் அனைவரின் மனதிலும் சிறந்த வழிகாட்டியாக உள்ளார்.

  மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளை மாண்புமிகு அம்மா அவர்களின் எண்ணப்படி ஏழை எளியோர்களுக்கு உதவிடும் நாளாக நாம் கொண்டாடுகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு துணைநின்று உதவிடும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பிரிவினைவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜாதி மத மோதல்கள், சமூக சமுதாய பாதிப்புகள் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்கள் ஏற்படும் போது மக்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான் ஏற்படும். அது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று இருக்குமா என்ற ஏக்கம் தான் அனைவரின் மனதிலும் ஏற்படும்.

  மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுகவை கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் கண் இமை போல் கட்டிக்காத்து வருகிறார். தமிழகத்தில் ஆட்சி நடத்தும் விடியா திமுக அரசின் செயல்படாத தன்மை, சட்டவிரோத செயல்கள், போதை பொருட்கள் விற்பனை, ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை உள்ளிட்ட அன்றாட மக்கள் விரோத நிகழ்வுகளை எடுத்துக்கூறி திமுகவின் தீய முகத்திரையை தினசரி கிழித்து வருகிறார் நம் பொதுச்செயலாளர் அவர்கள்.

  புதுச்சேரியில் 5 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக ஆட்சியை வழங்கி வருகிறது. அறிவித்த அனைத்து திட்ட பயன்களும் மக்களை உடனுக்குடன் சென்றடைகின்றன. கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது இருண்ட ஆட்சியை கொடுத்த திமுக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் பொய் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாயை திறந்தாலே பொய்யை தவிர வேறு எதுவும் வருவதில்லை. இன்னொரு கட்சியான திமுக வாய்மூடி மவுனம் காத்து தங்களது தொழில்வளத்தை பெருக்கிக்கொண்டு வருகிறது.

  நடைபெற இருக்கும் தேர்தல் தோல்வி பயத்தால் திமுகவும் காங்கிரசும் அராஜகத்தை கட்டவிழ்த்து வருகிறார்கள். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்கள் கட்சி அலுவலகத்தில் பேசும் போது எல்லாரும் உருட்டு கட்டைகளையும் ஆயுதுங்களையும் கொண்டு எதிரியை தாக்க தயாராக இருங்கல் என பேசுகிறார். ஒரு பெரிய மனிதர் இப்படியெல்லாம் பேசி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க பார்க்கிறார்.

  வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மக்கள் விரோத விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி மக்களுக்காக பாடுபடும் மாண்புமிகு எடப்படியார் தலைமையில் அதிமுக ஆட்சியை கொண்டுவர மக்கள் முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியிலும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அங்கம் வகிக்கும் நல்லாட்சி மலர நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர்
ஆர்.ராஜாராமன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கோமளா,மாநில கழக இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் மகாதேவி, கணேசன். ஆர்.வி.திருநாவுக்கரசு,
மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகரக் கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம். உமா என்ற கோவிந்தம்மாள் பி.எல்.கணேசன், எம்.ஏ.கே.கருணாநிதி,,எம். நாகமணி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஏ.,காந்தி, பி. குமுதன் ஆர். மணவாளன்.,உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ். சித்தானந்தம்,மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏ.பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விமலா ஸ்ரீ,மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,முன்னாள் மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவாலய இளங்கோவன்,மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில இலக்கியணி செயலாளர் கே.எம்.ராமசாமி,மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் டி. செல்வம்,மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே. சுதர்சன்,மாநில கலைப் பிரிவு செயலாளர் செந்தில்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், வெங்கடேசன், சிவராமராஜா, நாக. லோகநாதன், ஜானிபாய்,ராஜராஜன்,
கல்பனா, ஜெயந்தி, தொகுதி கழக செயலாளர்கள் எம்.பி.பாஸ்கர்,ஜி கருணாநிதி. கே.சம்பத், எஸ்.ராஜா, எம். கமல்தாஸ், Dr.எஸ். கணேஷ் கே.,இரிசப்பன், வீ. பிரதீப்குமார், ஆர். எம்.நடேசன், பி. கிருஷ்ணன், கே.வேலவன், வி., எம்.முகமது யூசுப் வி. கோபால், இளங்கோ, சீனிவாசன், மாநில எம்ஜிஆர் மன்ற தலைவர் பாண்டுரங்கன், மாநில எம் ஜி ஆர் மன்ற, இணைச் செயலாளர்கள் கணேசன், அன்பழகன்,இருதயராஜ், துணைத்தலைவர்கள் பால்ராஜ், சத்தியமூர்த்தி,மாநில மகளிர் அணி தலைவர் தரணிதேவி, மாநிலத் துணைச் செயலாளர் மகேஸ்வரி,மாநில மகளிர் அணி பொருளாளர் செந்திலரிசி,மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் ராமச்சந்திரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ராசு (எ)வரதன்,மாநில வர்த்தக அணி தலைவர் குணா,மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் மோகன்தாஸ், ரபீக்,மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சையது அகமது, மொய்தீன்,முன்னாள் தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன், தொகுதி கழக தலைவர்கள் சவரிநாதன், மூர்த்தி, ராஜேந்திரன், ஆறுமுகம், கருணாநிதி, கண்ணன், சங்கர், சுரேஷ்குமார்,, சிவகுமார், ரவி , இலியாஸ் என்ற பஜீலுதீன், சிவா,கிருஷ்ணன் உட்பட கழகத்தினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.