புதுவை எல்லை பிள்ளை சாவடி சாலையில் அமைந்துள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிலை அடியில் வைக்கப்பட்டிருந்த அம்மா அவர்களின் உருவப்படத்திற்கு திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கழக நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் லெனின் வீதி கழக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மா அவர்களின் உருவப்படத்திற்கு திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கழகக் கொடி ஏற்றப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. மாநில கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்