June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உடல் வலிமையை வலியுறுத்தி பொதுமக்கள் விழிப்புணர்வு ஓட்டம்..

ஈரோட்டில் குடியரசு தினத்தன்று ஒரு புதிய முயற்சி..

ஈரோடு. ஜன. 28

இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும், இந்திய மக்களுக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டம் தேவைப்பட்டது. இதற்காக நவம்பர் 1946-இல் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946-இல் நடைபெற்றது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் விவாதித்து இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது. இதன் நிரந்தரத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் வரைவுக் குழுத் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் செயல்பட்டனர்.

26 நவம்பர் 1949 அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள்: 26 ஜனவரி 1950. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறோம்.

இதை வலியுறுத்தி பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக இந்தியா தனது 76-வது குடியரசைத் தழுவும் வேளையில், உடல் வலிமையை வலியுறுத்தியும் மற்றும் குடியரசு நாளைப் போற்றியும் இன்று ஈரோட்டில் i-Fit Club உறுப்பினர்கள் (100 உறுப்பினர்கள்) இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 26 கி.மீ தூரம் நமது மூவர்ண தேசியக் கொடியை ஏந்தித் தொடர் ஓட்டம் ஓடினர்.

இந்தத் தொடர் ஓட்டத்தை i-Fit Club நிர்வாகிகள் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.