June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உலகம் உங்கள் கையில் திட்டம் மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்..

திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு. ஜன. 28

தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அதில் ஒன்றான உலகம் உங்கள் கையில் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நல திட்ட உதவிகளை கல்லூரி மாணவ மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம் திண்டல் வேளாளர் கல்லூரியில் நடைபெற்ற, உலகம் உங்கள் கையில் சிறப்பு திட்ட நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈரோடு கிழக்கு வி. சி சந்திரகுமார், அந்தியூர் ஏஜி வெங்கடாஜலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர்வி. செல்வராஜ், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.