கழக நிறுவனர் புரட்சித்தலைவர் அவர்களின் 109வது ஆண்டு பிறந்தநாள் விழா, புதுவை மாநில அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில், மாநிலக் கழக செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
புதுவை குயவர் பாளையம், லெனின் வீதி மாநிலக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அலங்கரித்து வைக்கப்பட்ட புரட்சித்தலைவர் அவர்களின் உருவப்படத்திற்கு மாநிலக் கழக செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கழகக் கொடி ஏற்றப்பட்டு, பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள புரட்சித்தலைவர் சிலைக்கு, திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
இதில் திரளான நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில் புதுவை முழுவதும் பல்வேறு தொகுதிகளில் புரட்சித்தலைவர் உருவப்படம் வைத்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!