வடமதுரை, ஜன.18-
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1995-ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அவர்களது பள்ளி ஓவிய ஆசிரியை பாத்திமா மேரிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர். அதன்பின்னர் குடும்பத்தினருடன் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். அதன்பின்னர் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!