July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வடமதுரை, ஜன.18-
பெரியகோட்டை அருகே உள்ள கோம்பையான்பட்டி புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் மத நல்லிணக்கண சமபந்தி அன்னதான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி புனித பெரிய அந்தோனியார் ஆலயத்தில் உள்ள புனிதர்கள் சொரூபங்களுக்கும், அதே பகுதியில் உள்ள
விநாயகர், காளியம்மன், மாரியம்மன் ,
அணைக்குளம் கன்னிமார் கோவில்களுக்கும், புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கிய மாதா, புனித அமலோற்பவ மாதா ஆலயங்களுக்கும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பூ மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடத்தி பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன் பின்பு காணிக்கையாக வந்த 30 ஆட்டுக் கிடாய்கள், 140 சேவல்கள் மற்றும் 500 கிலோ அரிசியை கொண்டு பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் புனித அந்தோணியார் சிற்றாலய விழா குழுவினர் மேற்கொண்டனர்.