வந்தவாசி, ஜன 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தின் உள்ளடக்கிய கல்வித்திட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், வந்தவாசி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் டி.தரணி, மேற்பார்வையாளர் டி.ஜெயசீலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, நகர் மன்ற தலைவர் ஜலால், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சத்யா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் கோ.மாலதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு தலைமை ஆசிரியை சித்ரா நிகழ்வை தொகுத்து வழங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் நன்றி கூறினார். இந்த முகாமில், 138 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். அவர்களுக்கு, மனநலம், குழந்தைகள் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்தனர். மேலும் 9 பேருக்கு, புதிய அடையாள அட்டை, 20பேருக்கு அடையாள அட்டை புதுப்பித்தல், 16 பேருக்கு பஸ் பாஸ் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் பார்த்திபன் , திருவேங்கடலெட்சுமி, சிறப்பு பயிற்றுனர்கள் எமல்டாராணி, லத்தீப், லதிஷா மேரி ,பச்சையம்மாள், இயன்முறை மருத்துவர் அரசு, ஒன்றிய கணக்காளர் பானுசந்தர், பள்ளி ஆசிரியர்கள் ராமச்சந்திரன் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி என்எஸ்எஸ் மாணவர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தன்னார்வலர்களாக பணி செய்தனர். இதில் ஆறு ஒன்றியங்களைச் சார்ந்த சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் பிசியோதெரபி கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

More Stories
திருச்சி அருகேரயில் மோதிவாலிபர் காயம்அரசு மருத்துவமனையில் சிகிச்சை :
பணி நிறைவு பாராட்டு விழா :
விழுப்புரம் இ எஸ் கல்வியல் கல்லூரியில்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு