June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முத்தரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புண்டரீகவள்ளி சமேத ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் என்கிற பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. கடந்த இருபதாம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி நாள்தோறும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருமே நிலையில் நேற்று நாச்சியார் திருக்கோளத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் கோவில் உட்புறப்பாடு நடைபெற்று பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் பெருமாளை வழிபட்டு சென்று வருகின்றனர்