June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளி மாணவர்கள் செல்லும் நடைபாதை சேதமடைந்துள்ளதால் உடனடி சீரமைப்பு மேற்கொள்ள கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா
பருதிபுரம் கிராமத்தில் ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் வழித்தடத்தில் கால்வாய் மீது போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட்
கடந்த மாதம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட, பள்ளி மாணவர்கள் தினமும் பயன்படுத்தி வரும் வழிப்பாதை தற்போது சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த நடைபாதையை கடந்து தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. தற்போது பாதை உடைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் நலனுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே, மாணவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நடைபாதையை உடனடியாக ஆய்வு செய்து, விரைந்து சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதில் தாமதம் ஏற்பட்டால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய முக்கியத்துவம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறோம்.