பரமக்குடியில் நடிகர் ரஜினிகாந்தின் 75- வது பிறந்தநாள் விழா– மனநல காப்பகத்தில் இனிப்பு மற்றும் விருந்து வழங்கி கொண்டாட்டம் பரமக்குடி: நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி நகர் தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி நகர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் பரமக்குடி காவ்யா கல்வி மையம் மற்றும் சௌராஷ்ட்ரா நர்சரி, பிரைமரி பள்ளியில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரமக்குடி அருள் சான்று நிலையத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி, அசைவ விருந்து வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி நகர் தலைவர் நாகா (எ) நாகநாதன் தலைமை தாங்கினார். நகர் இணைச் செயலாளர்கள் எஸ்.என். நாகநாதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் துணைச் செயலாளர் சுதாகர் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் பிரபு, இராமநாதபுரம் நகர் தலைவர் சுரேஷ் மேத்தா, நகர் துணைத் தலைவர் பாபா முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சித் குமார், இராஜேஸ், ராம்குமார், ரஜினி குமார், அசோக் மேத்தா, நாகாஅர்சுன், செல்லக்கிளி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!