அரியலூர் நகராட்சிக்குட்பட்ட தினசரி காந்தி மார்க்கெட்டில் சேதமடைந்திருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது இதனையடுத்து தினசரி காந்தி மார்க்கெட்டிற்கான 2 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார் மேலும் கட்டிடம் கட்டுவதற்கான கட்டிட வரைபடங்களை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார் இதனையடுத்து அரியலூரில் இருந்து கோவிந்தபுரம் வரையிலான இடைவெளி தடத்திலிருந்து இருவழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மற்றும் அரியலூரில் இருந்து பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் அயனாத்தூர் வரையில் உள்ள இடைவெளி தடத்திலிருந்து இருவழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் என மொத்தம் 11 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரியலூர் – தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் சாலை பணிகள் என 11 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!