திருச்சி-
டிசம்பர்-9
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கருப்பூர் ஊராட்சி காரைக்குளத்தில் இருந்து கருப்பூர் வடக்கிப்பட்டி செல்லும் சாலை மேடு, பள்ளமுமாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் இந்த சாலை கடந்து செல்கையில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் அவசர தேவைகளுக்கு செல்பவர்களும் ,பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களும் ,வேலைக்கு செல்பவர்களும் இந்த சாலையை கடந்து செல்கையில் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. மழைக்காலங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி சாலை சரிவர தெரியாமல் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது . ஆகவே இந்த சாலையை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தி தர வேண்டுமென தமிழர் தேசம் கட்சியின் மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ஆர் முத்துசாமி தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். சரி செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். இல்லையெனில் சாலை மறியல் ,போராட்டம் வெடிக்கும்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!