வந்தவாசி, டிச 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி யுனிவர்ஸ் அபாகஸ் அகாடமி நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில் 140 மாணவ மாணவிகள் பங்கு பெற்று சாதனை படைத்ததை முன்னிட்டு அவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகாடமி நிறுவனர் ஜெயத்தூ நிஷா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, மனோதத்துவ நிபுணர் டாக்டர் இரா பாஸ்கரன், டாக்டர் திவ்யதர்ஷினி பங்கேற்று, சிறப்புரை ஆற்றி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்