சர்வதேச நாடுகளில் உள்ள மொழி,கலாச்சாரம்,தொழில் வாய்ப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கோவை:டிச-08 குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா குளோபல் பள்ளியில் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலோடு பல்வேறு விதமான திறன்களை வளர்க்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..
இதன் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளில் உள்ள மொழி,கலாச்சாரம்,தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக( Country Vibez 25′) கண்ட்ரி வைப்ஸ் எனும் கண்காட்சி நடைபெற்றது…
ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாறன்,அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர்கள் பிரவீண் குமார்,ஸ்ரீநிதி பிரவீண்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்..
கண்காட்சியில் சர்வதேச நாடுகளான நியூசிலாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற ஆறு நாடுகளின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, உணவுப் பழக்கம், இயற்கை அமைப்பு, உடைகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன..
இதில் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள்,கட்டிட கலைகள்,அந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியல் அனுபவங்கள்,இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்கு செல்வதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காட்சி படுத்தப்பட்டன..
மேலும் அந்த நாடுகளில் மக்கள் பின்பற்றப்படும் கலாச்சார உடைகள் போல ஆடை அணிந்த மாணவர்கள் ஆறு விதமான நாடுகளின் கலாச்சார நடனங்களை ஆடினர்…
இது குறித்து ஆதித்யா குளோபல் பள்ளியின் முதல்வர் விஜயபிரபா கூறுகையில்,பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனையும் தாண்டி மேலை நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் கண்ட்ரி வைப்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டதாகவும்,இதனால் மாணவர்களின் மொழித்திறன் மற்றும் கற்றல் திறன்,தலைமைத்துவம் மேம்படும் என தெரிவித்தனர்..

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்