வந்தவாசி, டிச 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல் நேர மைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கவிஞர் பூங்குயில் சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.ரேவதி, சமூக ஆர்வலர் வி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.சம்பத்குமார் பங்கேற்று, மாற்றுத் திறனாளி குழந்தைகள் இறைவனின் குழந்தைகள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் உதயகுமார் பங்கேற்று அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை கூறினார். நிகழ்ச்சியில் கலைச்சுடர்மணி பெ.பார்த்திபன், மும்முனி ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் டி.நாதன்வேல், பட்டதாரி ஆசிரியர்கள் ம.ரகுபாரதி, செந்தில் குமார், நல்நூலகர் ஜா.தமீம், வழக்கறிஞர் சா.ரா.மணி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் ஜி.விநாயக மூர்த்தி, அ.ஷாகுல் அமீது, வட்டார வள மைய பொறுப்பாளர் கமலக்கண்ணன், ஆசிரியை வாசுகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் சிறப்பாசிரியர் எச்.லத்தீப் நன்றி கூறினார். அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..