தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசை குறை கூறிக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வது தவறு. சுகாதாரத்துறையை பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்பது முறையல்ல என்று அவர் கூறியுள்ளார்.
சபாநாயகர் மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியின்படி, குறிப்பிட்ட அந்த மருந்து கம்பெனி காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது. மேலும், இதை வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி ஆகியோரின் உறவினர்கள் நடத்துகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கட்சிகள் செய்த தவறுகளுக்காக, அல்லது அவர்கள் மற்றவர்களுக்கு இடங்களை வாடகைக்கு விட்டதன் மூலமாக நடந்த தவறுகளுக்காக, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தாங்கள் செய்த தவறுகளை மற்றவர்கள் மீது பழி போடக் கூடாது. மக்களை ஏமாற்றலாம், ஆனால் இயக்கத் தலைவர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள அவர், தேசியக் கட்சிகள் இரண்டு பேரும் சண்டையிட்டுக்கொண்டு மாநிலக் கட்சித் தலைவரான முதலமைச்சர் ரங்கசாமியை குறை கூறக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :