அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரவிழா (21.11.2025 முதல் 04.12.2025 வரை) அனுசரிக்கும் பொருட்டு, NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி,இன்று (03.12.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
“குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான கனவு, குடும்ப நலத்தில் ஆண்கள் பங்கேற்றால் மட்டுமே நனவு” என்பதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்- தழும்பு வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை இன்றி, பாதுகாப்பாகவும், பக்கவிளைவுகள் இன்றியும் செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் பயனடைந்துள்ளார்கள். மேலும், அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக ரூ.1100/-, ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும்.
அந்த வகையில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரவிழா NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தொடங்கி வைத்து, சிறப்பு முகாம்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, NSV விளக்க கையேடு மற்றும் கைப்பிரதிகளையும் வெளியிட்டார். மேலும், ஜெயங்கொண்டம் துரை மருத்துவமனைக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை அங்கீகாரத்திற்கான சான்றிதழையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள், இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம், துணை இயக்குநர் மரு.ஜெயந்தி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், மாவட்ட தாய் சேய் நல சுகாதார அலுவலர் சதிஷ், வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் பிரபாவதி, திவ்யா, .பழனிசாமி,சங்கீதா, மணிமேகலை, மாவட்ட குடும்பநல பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!