June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் இன்று மின் தடை அறிவிப்பு. 8 மணி நேரம் மின்சாரம் இருக்காது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, கொளத்தூர்,சின்ன மேட்டூர்,லக்கம் பட்டி, சின்ன தண்டா,பெரியதண்டா,நீதிபுரம், கோவிந்த பாடி,காவேரிபுரம், கருங்கலூர்,சத்யா நகர்,கத்திரிப்பட்டி, கோட்டையூர்,காரைக்காடு, ஏமனூர்கொங்கிரிப்பட்டி,கோரப்பள்ளம்,புதுவேலமங்கலம்,தான மூர்த்தி காடு,உக்கம்பருத்திக்காடு,சுப்பிரமணியபுரம்,பண்ணவாடி, சேத்துக்குளி,மாமரத்தூர்,ஓட்டங்காடு, குரும்பனூர்,சவேரியார் பாளையம்,ஆலமரத்துப்பட்டி,குள்ளம்பாளையம்,பூமனூர், செட்டியூர்,பாலமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.