சங்கராபுரம் டிச 01
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் 25 ஆண்டு காலமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனராக வெள்ளி கண்ணன் பணிபுரிந்து வந்தார். அவர் வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்றார். அவருக்கு இன்று ரங்கப்பனூர் ஊராட்சியின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அவருக்கு சந்தன மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும், புதிய சீருடை வழங்கியும், கௌரவிக்கப்பட்டது. அவரை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் அவரது சொந்த வாகனத்தில் அவரையும் அவரது துணைவியாரையும் அழைத்துக் கொண்டு பணி ஓய்வின் கடைசி நாளான இன்று அவரது இல்லத்திற்கு சென்று விட்டு விட்டு வந்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விருத்தாம்பாள் பச்சையாபிள்ளை மற்றும் வார்டு உறுப்பினர்கள் மீனா துரை ,இளம்வழுதி, ஸ்டெல்லா வேலு ,தமிழ் ரகு ,ரூபாவதி புகழேந்தி, ஏழுமலை, மாசிலாமணி ,ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கௌரவித்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் திரளான பொதுமக்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்த ஊராட்சி மன்ற பணியாளர்கள், மற்றும் அலுவலக கணினி உதவியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் முடிவில் கேக் வெட்டியும் தேனீர் இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியாக ஊராட்சி செயலர் திருமால்வளவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்