பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டியும் பலன் இல்லை..
மண்டல குழு தலைவர் குறிஞ்சி தண்டபாணியின் பேச்சால் பரபரப்பு..
ஈரோடு. நவ. 29



ஈரோடு மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மண்டல குழு, மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டி பேசினர்.
ஈரோடு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் அரபித் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கம்போல் திருக்குறள் கூறி மேயர் நாகரிகம் கூட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
நேற்றைய கூட்டத்தில் முதல் நபராக 43 வது வார்டு மாம் என்ற உறுப்பினர் சபு ராமா சாதிக் பாட்சா பேசினார்..
அவர் பேசும்போது மறைந்த மாமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தில் ஒரு வரி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும் கொண்டு வந்து இருக்கலாம். நடப்பு மாநகராட்சியில் அவர் மாமன்ற உறுப்பினராக இருந்து வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு முன்னதாக தீர்மானத்தில் ஒரு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து இருக்கலாம்.
மறைந்த எங்கள் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மற்றும் மறைந்த திருமகன் ஈவேரா ஆகியோருக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அந்த நடைமுறை நடப்பு மாநகராட்சியில் மாமன்றம் உறுப்பினராக இருந்த ஒருவருக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பல ஆடைகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
குறிப்பாக கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரியும், குப்பை வரியை முழுமையாக நீக்க கோரியும், மற்றும் சாலை மற்றும் சாக்கடை வசதிகளை மேம் படுத்தி தரக் கூறியும் பேசினார்கள்.
குப்பைகளை அல்லும் வாகனங்கள், ஜேசிபி இயந்திரங்கள் முறையாக பயன்படுத்தவில்லை என்றும், அவைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறையாக எப்சி காட்டப்படாமல் இருப்பதையும் கண்டித்து பேசினார்.
ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆகிய, அவைகள் இன்னும் பல பகுதிகளுக்கு சென்றடையவில்லை என்றும், அவர்களை முறைப்படுத்தி ஊராட்சி கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டுமென்றும் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்து பேசினர்.
நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் வழக்கம் போல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, கூடுதல் வரி குறைப்பு உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து நாங்கள் வெளிநருப்பு செய்வதாக கூறிவிட்டு, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வழி நடப்பு செய்தனர்.
அதன் பிறகு பேசிய நான்காவது மண்டல குழு தலைவர் குறிஞ்சி தண்டபாணி பல்வேறு விஷயங்களை முன் வைத்து காரசாரமாக ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக மாநகராட்சியின் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து, ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் இதுபோன்று சில இடங்களில் மாநகராட்சியின் பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும், வெறும் காட்சி பொருளாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றது.
அந்தக் கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கோ அல்லது வாடகைக்கோ விடப்படாமல் இருப்பது மாநகராட்சிக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல் பல இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் தகுந்த முறையான வியாபாரம் இல்லை என கோரி அந்த கடைகளை காலி செய்து வருவதும், மாநகராட்சிக்கு கூடுதல் இழப்புதான்.
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் இருந்து வருவது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. என்று மண்டல குழு தலைவர் குறிஞ்சி தண்டபாணி காரசாரமாக பேசினார்.
பின்னர் பேசிய, 1,வது மண்டல குழு தலைவர் பி. கே . பழனிசாமி பேசுகையில்…
மறைந்த இந்த மாமன்றத்தின் உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டவர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
மேலும் 24வது வார்டு பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மூலம் அமைக்கப்பட்டுள்ள வால்வுகள் உடைந்தும், அப்பகுதியில் சாலைகள் சேதமடைந்தும் உள்ளது இதனால் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்.
ஆதாரங்களை கையில் வைத்து காண்பித்து ஆவேசமாக பி. கே பழனிசாமி பேசியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கோரிக்கைகளை விரைவில் சரி செய்து வைப்பதாக, ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் உதவி ஆணையாளர் தனலட்சுமி, மாநகரப் பொறியாளர் கே. முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..