June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பேற்பு: குலதெய்வக் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் நிதியுதவி!

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்களின் நேரடி மேற்பார்வையில், தேச நலன் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக இயங்கி வரும் ‘இந்து தர்ம பாதுகாப்பு பேரவை’யின் முக்கியப் பொறுப்பான மாநில துணைத் தலைவராக, திரு. மருதமலையார் (என்கிற) மருதமலை ஏகேஜி சித்தார்த் அபிமன்யு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆன்மீகத்திலும், பொது சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட திரு. மருதமலை ஏகேஜி சித்தார்த் அபிமன்யு அவர்களுக்கு, இந்து தர்ம பாதுகாப்பு பேரவையில் மாநில அளவிலான இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ஒரு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட இந்தப் புதிய பொறுப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அப்பணியில் சிறப்பாகச் செயல்பட வேண்டியும், அவர் தனது குலதெய்வமான பனையாத்தம்மன் திருக்கோயிலுக்குச் சென்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார். அங்கு இறைவனின் ஆசி வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கோயிலின் வளர்ச்சியில் பக்திப்பூர்வமாகப் பங்கேற்கும் விதமாக, தற்போது அங்கு நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 5,001/- (ரூபாய் ஐந்தாயிரத்து ஒன்று) நிதியுதவியாக வழங்கினார்.
இந்தப் புதிய நியமனத்தின் மூலம், இந்து தர்மத்தைக் காக்கும் பணிகளிலும், மக்கள் சேவையிலும் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.