June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் குடும்பத்துடன் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை :

திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே முத்துப்பட்டி பிரிவு அருகில் சென்ற திருச்சி கீழ சிந்தாமணியை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் (58), மனைவி சந்தான லட்சுமி ( 50 ) ,மகள் புவனேஸ்வரி (22 ) ஆகிய இவர்களுடன் TN 81 E 12 53 EECO என்ற பதிவு கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் மதுரை நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி முத்துப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சக்திவேல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையின் நடுவில் உள்ள செண்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து சாலை விபத்து ஏற்பட்டது, இதில் மேற்கண்ட நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு துவரங்குறிச்சி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று தனியார் சுபம் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் , தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு துவரங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.