கோவை நவ:22
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகளான புதுக்காடு மற்றும் கிழ்ச்சித்திரைச்சாவடி (குனியமுத்தூர்) அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் திட்டம்” துவங்கப்பட்டுள்ளது.சிறுதுளி அமைப்பு கோவை மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் கலந்துகொண்டு இந்த திட்டத்தை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர் தலைமை அலுவலர் நதியா மாலி,சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் நீர்வளத்துறையின் உதவிப்பொறியாளர் நல்லத்தம்பி மற்றும் தமிழ் நாடு விவசாய சங்க தலைவர்கள் சு.பழனிச்சாமி மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை துவக்கி வைத்தார்.உடன் சிறுதுளியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி குறித்து சிறு துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது நொய்யல் ஆற்றில் ஆண்டிற்கு நாற்பதற்கும் குறைந்த நாட்களே மழைநீர் ஓடுவதால் அதனை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த,நம் முன்னோர்கள் அணைக்கட்டுகளைகட்டி ஆற்றில் பாயும் நீரின் திசையை மாற்றி வாய்க்கால்கள் மூலம் குளம் மற்றும் குட்டைகளில் சேமித்து வைத்தனர் இது விவசாயம் செழிக்க மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர பெரும்பங்களித்தது.இந்த நடைமுறை காலப்போக்கில் அணைக்கட்டுகளில் போதிய பராமரிப்பு மற்றும் தூர்வாரப்படாததால் வண்டல் மண் படிந்து வாய்க்கால்கள் புதர்களுடன் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாசன மதுகுகளை உபயோகிப்பதில் சிரமம் உள்ளது, இதன் விளைவாக விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இந்த புனரமைப்பு பணியானது நிலத்தடி நீர்வளம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.
6.5 கோடி லிட்டர் சேமிப்புதிறனை உயர்த்த முடியும்
அணைக்கட்டு அருகிலுள்ள விவசாயிகளின் விவசாய உற்பத்தித்திறன் உயர்வுகாணும்.
சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு விரிவடையும், விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக பயிர் மாற்று முறைகளில் மாற்றங்கள் ஏற்படும்,2093 ஏக்கர் பாசனப்பகுதியில் உள்ள 697 விவசாயிகள் நேரடியாகவும்,2500 விவசாயிகள் மறைமுகமாகவும் பயன் பெறவுள்ளனர்,7.2697 திறந்த கிணறுகள் 700 ஆழ்துளைக்கிணறுகள் நிரம்பி, நீர்மட்டம் மேம்படும்.
குளங்களில் மழைநீர் சேகரிக்கப்படும், நீர்தரம் மேம்படும் என்று கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!