February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம் விண்ணப்பம் படிவம். தொடர்பாக..

ஈரோடு மாநகர இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

ஈரோடு. நவ. 19

வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பாக ஈரோடு மாநகர இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனதில் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளதாவது..

வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த சில நாட்களாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 17 சதவிகித விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. என தேர்தல் ஆணையமே அறிவிப்பு செய்துள்ளது.

குடி மாற்றம் செய்யப்பட்ட பொதுமக்கள் நிறைய பேருக்கு விண்ணப்ப படிவங்கள் கிடைக்காமல் உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்கள் பாக அலுவலர்களை தேடி கேட்கும்போது மாற்றம் ஆகிவிட்டார்கள் என நாங்கள் கூறி கொடுத்து விட்டோம் எனவும், மறைவு வாக்காளர் பட்டியல் மறைவு வாக்காளர் பட்டியல் வெளியானவுடன் புதிதான படிவம் ஆறு கொடுத்து தான் சேர முடியும் என.

இது தவிர சிறப்பு திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்த போது, விண்ணப்பம் படிவம் கொடுப்பதற்கோ பெறுவதற்கோ தேதி நிர்ணயம்.

இதன் காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற வாக்காளர் பலபேர் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். மேலும் தேர்தல் வட்டாட்சியர் சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கட்சிகளுக்கு விளக்கக் கூட்டத்தில் வாக்காளர்கள் அந்த முகவரியில் இல்லாவிட்டால் விண்ணப்ப படிவம் அந்த வீட்டின் முன்பு வெட்டப்பட்டு ஆக அலுவலர் அதை மூன்று முறை படம் எடுத்த அதன் பிறகு மாற்றம் என முடிவு செய்யப்படும். எனக் கூறியதும்.

வாக்காளர்கள் விண்ணப்பம் படிவம் கேட்டு அலைகழிக்கப்படும் நிலை. மேலும் தேர்தல் ஆணையத்தின் விதியின்படி மாற்றம் என முடிவு எடுக்கவில்லை என்பதாலும் வாக்காளர்களுக்கு ஏமாற்றம் என்பதால் சில நாட்கள் தேதி நிர்ணயம் செய்து விண்ணப்ப படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வாக்காளர்கள் விடுபடாமல் அவர்களின் வாக்குரிமை இழக்காமல் கிடைத்தது நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், ஈரோடு மாநகர இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp